கோடிக்கரையில் கடல் 150 அடி உள்வாங்கியதால் பரபரப்பு .
வேதாரணியம்
மார்ச் 05
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் படகுத்துறைமுகத்தில் கடல் கரையிலிருந்து 150 அடி உள்வாங்கியது மட்டுமின்றி அந்த கடற்கரைப்பகுதி முழுவதும் சேறு நிறைந்து காணப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்துறை அறிவுறுத்தியதை அடுத்து கடந்த 3ம் தேதி முதல் கோடிக்கரையில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை .கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீன்பிடித்து கரை திரும்புகின்றனர். இந்நிலையில் கடற்கரையோரத்தில் சேறு நிறைந்து காணப்படுவதுடன் கடலும் உள்வாங்கி இருப்பது மீனவர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

