தூத்துக்குடி மேயராக ஜெகன் பெரியசாமி போட்டியின்றி தேர்வு –
கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஜெகன் பெரியசாமி இன்று மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வாா்டுகளுக்கு கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், அக்கட்சியின் மேயா் வேட்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவர் வேட்புமனுவை மாநகராட்சி ஆணையரிடம் தாக்கல் செய்தார். வேட்பு மனுவை 45வது வார்டு திமுக உறுப்பினர் ராமகிருஷ்ணன் முன்மொழிந்திருந்தார், 39 வார்டு உறுப்பினர் சுரேஷ்குமார் வழிமொழிந்தார்.
மேயர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் ஜெகன் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் மேயர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டார். அவரிடம் மேயருக்கான ஆடை, 111 பவுன் தங்கச் சங்கிலி, வெள்ளி செங்கோல் ஆகியவற்றை ஆணையா் சாருஸ்ரீ வழங்கி பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம்,
மாமன்ற உறுப்பினர் காந்திமணி, சுப்புலெட்சுமி, ரெங்கசாமி, நாகேஸ்வரி, அந்தோணிபிரகாஷ் மார்சலின், ஜெயசீலி நிர்மல்ராஜ், பவானி, ஜெபஸ்டின் சுதா, கற்பகனி, தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, கீதாமுருகேன், இசக்கிராஜா, கண்ணன், ராமர், சீனிவாசன், சோமசுந்தரி, ஜான்சிராணி, மகேஸ்வரி, தனலெட்சுமி, மெட்டில்டா, எடிண்டா, மரியகீதா, சரண்யா, ராமு அம்மாள், கலைச்செல்வி, அதிர்ஷ்டமணி, கனகராஜ், கந்தசாமி, பொன்னப்பன், சந்திரபோஸ்;;, விஜயலெட்சுமி, பாப்பாத்தி, மும்தாஜ், சுரேஷ்குமார், ரிக்டா, பேபி ஏஞ்சலின், முத்துமாரி, ராமகிருஷ்ணன், ஜெனிட்டா, ரெக்சிலின், ராஜேந்திரன், வைதேகி, சரவணகுமார், முத்துவேல், விஜயகுமார், ராஜதுரை, சுயம்பு, பச்சிராஜ்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


