நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் _ வேதாரண்யம் நகராட்சியில் திமுகவை சேர்ந்த மா. மீ.புகழேந்தி நகராட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு.
வேதாரண்யம்
மார்ச் 04
க|டந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகளக்காண தேர்தல் நடைபெற்றது. 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது 18 திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பெரும்பான்மை பலத்துடன் திமுகவினர் இருந்ததால் திமுக நகர கழக செயலாளர் மா.மீ. புகழேந்தி தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோன்று 14வது வார்டு உறுப்பினராக தேர்வு பெற்ற திமுகவைச் சேர்ந்த ரா. மங்களநாயகி வேதாரண்யம் நகராட்சியின் துணைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

