நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தலைஞாயிறு பேரூராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி தலைவராக தேர்வு .
நாகப்பட்டினம்
மார்ச் 04
தமிழகம் முழுவதும் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவிற்கு உட்பட்ட தலைஞாயிறு பேரூராட்சியில் 15-வார்டு களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த எட்டு வேட்பாளர்களும் , திமுகவைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர் இன்று தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகத்தில் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது இதில் அதிமுகவை சேர்ந்த செந்தமிழ் செல்வி திமுகவை சேர்ந்த முத்துலட்சுமி போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் போது இரண்டு வாக்குச் சீட்டை கசக்கி எறிந்ததால் மீண்டும் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. அதில் எட்டு வாக்குகளைப்பெற்று அதிமுகவைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி தலைஞாயிறு பேரூராட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மறைமுக தேர்தலின்போது நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர் .

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான டிஎஸ்பிக்கள், எஸ்ஐகள் மற்றும் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்தனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

