*இன்று விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆல்ககாலிக்ஸ் அனாநிமஸ் விடிவெள்ளி குழு மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.*
விளாத்திகுளம் உட்கோட்ட சங்கரலிங்கபுரம் காவல் எல்லைகுட்பட்ட நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் விடிவெள்ளி குழு மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமை வகித்தார்கள். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்லும்பொழுது கட்டாயமாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டுமென்றும், SOS செயலி விழிப்புணர்வு, சாலை போக்குவரத்து விழிப்புணர்வு, போக்சோ சட்ட விழிப்புணர்வு,குற்ற வழக்குகளில் ஈடுபட கூடாது என்றும்,குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிவது ஆகியவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.*

இந்நிகழ்ச்சியில் , கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி, தமிழ் துறை ஆசிரியர் முனியசாமி, பொருளாதார துறை ஆசிரியர் சுரேஷ் பாண்டி, வணிகமேலாண்மை ஆசிரியர் சம்பத்,கணிபொறியியல் ஆசிரியர் கண்ணன், உடற்கல்வி ஆசிரியர் ஆல்ட்ரின் மற்றும் மாணவர்கள் மாணவியர்கள் கலந்துகொண்டனர்.*

