கருக்கலைப்பு மாத்திரைகளை விற்க மாட்டோம் – உறுதிமொழி எடுத்த வேதாரணியம் நகர, தாலுகா மருந்து வணிகர் சங்கத்தினர்.
வேதாரணியம்
மார்ச் 03
கருக்கலைப்பு மாத்திரைகளை கடந்த 2020ஆம் ஆண்டு முதல் விற்கக்கூடாது என்ற மருந்து கட்டுப்பாட்டுத்துறை அறிவுரைகளை வேதாரணியம் நகர தாலுகா மருந்து வணிகர் சங்கத்தினர் அவசரக்கூட்டம் மூலம் உறுதி மொழி எடுத்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள 70 ஆங்கில மருந்து விற்பனை செய்யும் வேதாரண்யம் நகர, தாலுகா வணிகர் சங்கத்தினர் வேதாரணியம் ஓய்வூதியர் சங்க கட்டிடத்தில் நாகை மாவட்ட தலைவர் கே. ஜி. எம் .சேகர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் V.S.சித்தார்த்தன் முன்னிலையிலும் அவசரக் கூட்டம் நடந்தேறியது. இதில் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்குவதும் இல்லை, விற்பதும் இல்லை என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இத்தகவலை மாவட்ட உதவி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தெரியப்படுத்தும் விதமாக இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள மருந்து வணிகர் சங்கத்தினர் 58 பேர் கலந்து கொண்டனர்

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

