உழவர் நலத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
வேதாரண்யம் மார்ச் 2
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் ஊராட்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் பண்ணைக் கருவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
திருமருகல் ஊராட்சி ஒன்றியம் அருள்மொழிதேவன் கிராமத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகளுக்கு தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் தொடர்பான ஒருநாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து விவசாயிகளுடன் கலந்துரையாடி இடுபொருட்களான தென்னை மரம் ஏற்றும் கருவி, தெளிப்பான் கருவியினை வழங்கினார்.
சாகுபடி நிலங்கள் தவிர மீதமுள்ள நிலங்கள் மற்றும் வரப்புகளில் தகுதியுள்ளவர்களுக்கு விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் மரக்கன்றுகளில் உயிருடன் இருக்கும் மரக்கன்றுகளுக்கு மட்டும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒரு கன்றுக்கு ரூ.7 வீதம் பராமரிப்பு மானியம் வழங்கப்படும்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் நான்கு உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டு அதில் ஒன்றான திருமருகல் வட்டாரம் குத்தாலம் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு தேவையான வேளாண் இயந்திரங்களை வாங்குவதற்கு ரூ.5 இலட்சம் மானியமாக வழங்கி வேளாண் இயந்திரங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருவதையும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் திருமருகல் வட்டாரத்தில் முதல் கட்டமாக பனங்குடி, போலகம், அம்பல், ஏர்வாடி, கீழபூதனூர் ஆகிய கிராமங்களில் பண்ணை கருவிகளான கடப்பாறை, இரும்புசட்டி, களைகொத்தி, மண்வெட்டி, கதிர்அருவாள் முதலியனதலா 1வீதம் கொண்ட தொகுப்பு ரூ.3 ஆயிரம் மதிப்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 90சத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியமும் அனுமதிக்கப்படும்.
வேம்பு, தேக்கு, செம்மரம், மகாகனி, ஈட்டி மரம், வேங்கை மற்றும் மலைவேம்பு ஆகிய மரக்கன்றுகள் வனத்துறை சார்பில் நாற்று பண்ணை மூலமாக அதிகபட்சமாக ஒருநபருக்கு ஒரு ஹெக்டெருக்கு 400 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் தற்போதுவ ரை 992 விவசாயிகள் 1,42,535 மரக்கன்றுகள் கேட்டு பதிவு செய்து உள்ளனர். இதில் 621 விவசாயிகளுக்கு 82,259 கன்றுகள் வழங்கிட ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடந்து போலகம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து, தடுப்பூசி போடப்படுவதையும், கிராம நிர்வாக அலுவலகத்தையும், மேலும் அங்குள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியினை ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து திருமருகல் ஊராட்சி ஒன்றியம் குருவாடி, கட்டுமாவடி ஊராட்சியில் நியாய விலைக் கடையில் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இவ்வாய்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், அட்மா குழு தலைவர் செங்குட்டுவன், குத்தாலம் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் நவநீதம், வேளாண்மை உதவி இயக்குநர் கலைச்செல்வன், வேளாண்மை அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

