• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை – தூத்துக்குடி புதிய எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி

policeseithitv by policeseithitv
March 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை – தூத்துக்குடி புதிய எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை பெருநகர காவல் துணை ஆணையராக இருந்த பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வித பாரபட்சமுமின்றி சட்டம் ஒழுங்கு முழுமையாக பராமரிக்கப்படும். மாவட்டம் முழுவதும் அனைத்து சமுதாய உறுப்பினர்களுடன் காவல்துறையினர் நல்லுறவு வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டு சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை அறிந்து தீர்த்து வைப்பதற்கான சிறந்த சமுதாயக் காவல் பணி மேற்கொள்ளப்படும். சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு போதைப்பொருள் முழுமையாக ஒழிக்கப்படும். ரடிவுகள் முழுமையாக ஒழிக்கப்பட்டு, சமூக அமைதி பாதுகாக்கப்படும். காவல்துறை பொதுமக்களின் நண்பர்கள் என்பதை உறுதிபடுத்தும் வகையில் காவல்துறையின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோபி, இளங்கோவன், டிஎஸ்பிக்கள் கணேஷ், ஜெயராம், சம்பத், தனிப்பிரிவு ஆய்வாளர் பேச்சிமுத்து, உதவி ஆய்வாளர் கிறிஸ்டி, மக்கள் தொடர்பு அலுவலர் சத்ய நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் -தலைஞாயிறு பேரூராட்சியில் உறுப்பினர்கள் பதவி ஏற்பு

Next Post

உழவர் நலத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

Next Post
உழவர் நலத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

உழவர் நலத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In