தூத்துக்குடியில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது ஆர்வத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் போக்குவரத்து சீர்செய்யும் பணியில் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய சாலை பாதுகாப்பு படை (Road Safety Patrol) மாணவர்கள் 16 பேருக்கு, அவர்களது சேவையை பாராட்டி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.*
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 18.02.2022, 19.02.2022 மற்றும் தேர்தல் வாக்கு எண்ணும் நாளான 22.02.2022 ஆகிய 3 நாட்களும் காவல்துறைக்கு உதவியாக தூத்துக்குடி நகர உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் சாலை பாதுகாப்பு படையில் (Road Safety Patrol) உள்ள பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றினர்.
அவ்வாறு சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி ஸ்டார் மெட்ரிக்குலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பிரதீப் ராஜ், சக்தி கணேஷ், ஹரிஹரன், ஆரிப், இசக்கி பாண்டி, பேச்சிமுத்து, விக்னேஷ் பிரபு, உதயகுமார் அரவிந்த், கார்த்திக் ஸ்ரீராம், கிரசன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் விஷால், பாலஅபிஷேக், சதாசிவம் உட்பட 16 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று (01.03.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் காவல்துறை சார்பாக சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.*
*இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, தூத்துக்குடி போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர் லதா நேசகுமாரி ஆகியோர் உடனிருந்தனர்.*



