முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்- வேதாரணியத்தில் நலத்திட்ட உதவிகள்.
வேதாரணியம்
மார்ச் 01
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் இன்று வேதாரண்யத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேதாரணியம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் திமுகழக தீர்மான குழு உறுப்பினருமான என்.வி. காமராஜ் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வெடி வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் வேதாரண்யம் நகர 15வது வார்டில் உள்ள 500 பேருக்கு பருப்பு, எண்ணை, புளி உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் புடவைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் என்.வி.நடராஜன், வேதாரண்யம் நகராட்சியின் 15வது வார்டு உறுப்பினர் என். வி. கே. ராஜு மற்றும் நகரக் கழக துணைச் செயலாளர் A1 பாலு, 15-ஆவது வார்டு கழக செயலாளர் ராமசுப்பிரமணியன், என்.வி.கே.ரமேஷ் , துரை, கூரியர் கர்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

