நாகை அருகே “வாழ்வியலுக்கான அறிவியல் கண்காட்சி”
நாகப்பட்டினம்
பிப் 28
இந்தியா முழுவதும் தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நாகை அடுத்த ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியில் “வாழ்வியலுக்கான அறிவியல் கண்காட்சி ” நடைபெற்றது.
1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ந்தேதி சர்.சிவி ராமன் ஒளிச்சிதறலை கண்டுபிடித்தார்.
இது இராமன் விளைவு என்று அழைக்கப்பட்டது. இதற்காக இயற்பியலுக்கான
கிபி 1930ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இத்தகைய சிறப்பு மிகுந்த ராமன் விளைவு கண்டுபிடித்த நாள் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. அறிவியல் என்பது வெறும் விஞ்ஞானிகளுக்கும் மெத்த படித்தவர்களுக்குமான சொத்தல்ல.
அவை அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும். அது தான் அறிவியலின் வெற்றியாக கருத முடியும்.1987 ஆம் ஆண்டு முதல் இருந்து இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.அறிவியல் ஒரு பாடம் அல்ல,
அது வாழ்கையின் ஒரு அங்கம் என்பதை மாணவர்கள் அறிய வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் தேசிய அறிவியல் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.
நீடித்த எதிர்காலத்திற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறை’ என்பதே தேசிய அறிவியல் தினம் 2022-ன் மையப்பொருளாகும்.
அன்றாட வாழ்வில் அறிவியல் மூலம் எப்படி ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வது என்பதை மையப் பொருளாகக் கொண்டு ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலை பள்ளியில் “வாழ்வியல்அறிவியல் கண்காட்சி” நடத்தப்பட்டது.

நாம் தினமும் பயன்படுத்தும் சானிடைசர் எளிதில் தீப்பற்றக் கூடியதூ? குழந்தைகளுக்கு டயாபர் அதிகம் பயன்படுத்தினால் என்ன விளைவு ஏற்படும்?, கொழுப்பு உணவுகள் சாப்பிட்டு விட்டு குளிர்ந்த நீர் அருந்தலாமா? ஷாம்பூ தினமும் பயன்படுத்துவது கேசத்திற்கு நன்மை விளைவிக்குமா? சோடாப்பு மற்றும் வினிகர் சமையலில் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்குமா? போன்ற அன்றாட வாழ்விற்கு தேவையான சில விஷயங்களை தலைப்பாக வைத்து கண்காட்சி நடத்தப்பட்டது. மாணவர்கள் இந்த விஷயங்கள் குறித்து அறிவியல் கண்ணோட்டத்தில் சிந்திக்கவும் அவர்கள் மூலம் பெற்றோர்கள் விழிப்புணர்வு பெறவும் இந்த கண்காட்சி திட்டமிடப்பட்டது.
சுமார் 60-க்கும் மேற்பட்ட காட்சிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் காட்சி பொருள்கள் குறித்து விளக்கம் அளித்தனர். பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஊர் மக்கள் கண்காட்சியை காண வருகை தந்தனர்.
ஒன்றாம் வகுப்பு மாணவன் திரு வர்ஷன் கண்காட்சியை திறந்து வைத்துச் சிறப்பித்தார்.
அறிவியல் பட்டதாரி திருமதி.நித்யா கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்து ஒருங்கிணைத்திருந்தார். தலைமை ஆசிரியர் சிவா காட்சிப் பொருட்கள் வைத்திருந்த மாணவர்களுக்கு பரிசளித்து ஊக்குவித்தார்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

