முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அதிமுகவினர் நாகையில் ஆர்ப்பாட்டம்.
நாகப்பட்டினம்
பிப் 28
கடந்த 21ம் தேதி தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் . அவரது கைதை கண்டித்து இன்று அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் அவரித்திடலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் தலைமைவகித்தார். இதில் முன்னாள் அமைச்சர் ஜெயபால்,மாவட்டக் கழக பொருளாளர் சண்முகராசு மற்றும் நாகப்பட்டினம் நகர கழக செயலாளர் தங்க கதிரவன், வேதாரண்யம் நகர கழக செயலாளர் வழக்கறிஞர் நமசிவாயம் , வேதாரணியம் ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் கிரிதரன் மற்றும் மாவட்டத்திலுள்ள ஒன்றிய, நகர கழக செயலாளர்கள் , கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

