*விளாத்திகுளம் உட்கோட்டம்* :27.02.2022
*இன்று அண்ணாமலை ரெட்டியார் சமூக நல அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற 4-ஆம் ஆண்டு மினி மாரத்தான் போட்டியை விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.*
*கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் இளம் வீரர் வீராங்கனைகளை கண்டறியும் நோக்கத்தில் அண்ணாமலை ரெட்டியார் சமூக நல அறக்கட்டளை சார்பாக நான்காம் ஆண்டு மினி மாரத்தான் போட்டியானது விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த போட்டியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.G.V. மார்க்கண்டேயன் அவர்கள் தலைமை வகித்தார்கள். இந்தப் போட்டியினை விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் உற்சாகத்துடன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.*
*இந்த மினி மாரத்தான் போட்டியில் 14கி.மீ ஆண்கள் பிரிவில் 209பேர்,10 கி.மீ பெண்கள் பிரிவில் 58 பேர், குழந்தைகளுக்கான 2 கி.மீ பிரிவில் 25பேர் கலந்துகொண்டனர். மேலும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.விஜயலட்சுமி, விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளர் திரு.காசிலிங்கம், திரு.தேவராஜ் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் மூலம் போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்துதல், பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தன.*

