வேதாரண்யத்திற்கு உப்பு ஏற்ற வந்த லாரியில் டிரைவர் மர்ம மரணம்.
வேதாரணியம்
பிப் 26
நாகை மாவட்டம் வேதாரண்யம் நாகை சாலையில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே TN 30 AA 0844 என்ற பதிவெண் கொண்ட P.Bhuvaneswari என பெயர் எழுதபட்ட லாரி அகஸ்தியன் பள்ளியில் உப்பு ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று மதியம் நிறுத்திவிட்டு இரவு அதே லாரியில் படுத்தவர் இன்று மதியம் வரை எழுந்து வர வில்லை என அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் தந்தனர் . சம்பவ இடத்திற்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் தேவபாலன் சென்று பார்வையிட்டபோது ஓட்டுநர் இறந்துள்ளது தெரியவந்தது. லாரியை ஓட்டிவந்து இரவு லாரியில் படுத்திருந்து இறந்தவரின் ஓட்டுனர் உரிமத்தை பார்த்தபோது
R.செந்தில்குமார், வயது 39,
S/o ரெங்கநாதன்,
4, நல்ல கவுண்டர்பட்டி,
மேட்டூர், சேலம்,
என குறிப்பிடப்பட்டுள்ளது. உடனடியாக சேலத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்
பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேதாரண்யம் காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையிலான காவலர்கள் இறந்த ஓட்டுனர் உடலைக் கைப்பற்றி வேதாரணியம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

