நெல்லை உள்ளிட்ட 4 மாவட்ட சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு
பொது அமைதியை குலைக்கும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம்
டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
பொது அமைதியை குலைக்கும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் எஸ்பி களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்
நெல்லை, தூத்துக்குடி,
கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பி களுக்கு மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் நெல்லை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு தலைமை வகித்தார் கூட்டத்தில் 4 மாவட்டங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை குறித்து ஆய்வு செய்தார் பின்னர் அவர் பேசியதாவது
நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை பெற்றுத் தருவதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுபோன்று கொடுங்குற்றங்களில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளையும் பிடிவாரண்டு நிலுவையில் உள்ள குற்றவாளியும் சிறப்பு படை அமைத்து விரைவில் கைது செய்ய வேண்டும்
மேலும் போக்குவரத்து விதிகளை உரிய முறையில் செயல்படுத்தி சாலை விபத்து இறப்புகளை தடுக்கவும் தென்மாவட்டங்களில் பொது அமைதியை குலைக்கும் ரவுடிகள் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மற்றும் கஞ்சா, குட்கா, போன்ற போதைப் பொருட்களை விற்பவர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் திருட்டு மற்றும் கொள்ளை குற்றங்களை தடுக்கவும் குற்ற செயல்கள் அதிகமாக நடைபெறும் இடங்களை கண்டறிந்து அங்கு ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்
முன்னதாக நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி 4 மாவட்டங்களில் கொலை கொள்ளை ரேஷன் அரிசி கடத்தல், நிலமோசடி, பணமோசடி, மற்றும் கஞ்சா, குட்கா, பதுக்கல், சைபர் கிரைம், உள்ளிட்ட பல வழக்குகளில் சிறப்பாக துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்து தனி படையினருக்கு பாராட்டு சான்றிதழை டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்
கூட்டத்தில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் துரை குமார், நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார்,மாநகர காவல் துணை ஆணையாளர் கிழக்கு மண்டலம் டி.பி. சுரேஷ்குமார், துணை ஆணையாளர் மேற்கு மண்டலம் கே .சுரேஷ் குமார் எஸ்பி க்கள் நெல்லை சரவணன் கன்னியாகுமரி பத்ரி நாராயணன் தூத்துக்குடி ஜெயக்குமார் தென்காசி கிருஷ்ணராஜ் மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் நாக சங்கர் மாநகர நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் பிறைச்சந்திரன், மேலும் நெல்லை மாநகரில் கஞ்சா மற்றும் ரேசன் அரிசி கடத்தல் செய்த குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணியாற்றிய தனிப்படை காவலர்களான உதவி ஆய்வாளர் காசி பாண்டியன் தலைமை காவலர் வேல் செளத்ரி HC177 , முருகன் 201, சண்முகநாதன் HC1481 சண்முகசுந்தரம் HC1383 மகாராஜன்1660 அய்யாபிள்ளை1654 சுரேந்திரன்HC294 பொன் மோசஸ் HC1570 ஆகிய ஒன்பது காவல் ஆளுநர்களை மெச்சத் தகுந்த பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினார் மற்றும் அதிகாரிகள் காவலர்கள் கலந்து கொண்டனர்.


