போர் நிறுத்தம் மற்றும் உலக அமைதி வேண்டி ஆறாம் வகுப்பு மாணவன் சிரசாசனம் செய்தும் தலைகீழாய் நடந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நாகப்பட்டினம்
பிப் 26
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நிலவும் போரினால் உலக அமைதிக்கும் பொருளாதாரத்திற்கும் மனித குலத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் ஏற்படவும் உலக நாடுகள் இடையே சமாதானம் பெற்று அமைதி நிலவவும் நாகப்பட்டிணம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில உள்ள சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு மாணவன் செ. பிரவீன் தொடர்ச்சியாக சிரசாசனம் செய்தும் தலைகீழாக நடந்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மாணவர்கள் அனைவரும் அவரை உற்சாகப்படுத்தி போர் வேண்டாம் அமைதி வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

