• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இன்று துளிர் திறனறிதல் தேர்வு எழுதினார்கள்.

policeseithitv by policeseithitv
February 26, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இன்று துளிர் திறனறிதல் தேர்வு எழுதினார்கள்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

துளிர் திறனறிதல் தேர்வு

நாகப்பட்டினம்

பிப் 26

 

ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இன்று துளிர் திறனறிதல் தேர்வு எழுதினார்கள்.

மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழில் ”துளிர்” இதழையும் ஆங்கிலத்தில் ஜந்தர் மந்தர் இதழையும் நடத்தி வருகிறது.

துளிர் 35 வருடங்களைக் கடந்து வெளிவந்துக் கொண்டிருக்கிறது. 400வது இதழ் வெளி வந்துள்ளது. துளிரின் வளர்ச்சியும், ”துளிர்” இதழும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு மிகுந்த பெருமைகளை தரக்கூடியதாக உள்ளது.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆண்டுதோறும் துளிர் திறனறிதல் தேர்வையும் நடத்திவருகிறது. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவியாகவும் பயிற்சி பெறும் வகையிலும் நடைபெற்று வரும் இத்தேர்வில் மாநிலம் முழுதும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கிறார்கள்

வினாத்தாள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும்.

நான்கு விடைகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்யும் வகையில் 100 வினாக்கள் இருக்கும்.

கேள்விகள் பின்வரும் பகுதிகளில் இருந்து கேட்கப்படலாம் (புதிர் கணக்குகள், அறிவியல் மனப்பான்மை, சமூக அறிவியல், படமும் செய்தியும், சொற்சுருக்கம்)

தேர்வு முறை மாணவர்களுக்கு மிகுந்த பயன்தரும் முறையில் அமைந்திருக்கும்.

புதுமையாகவும் மாறுபட்ட வடிவங்களிலும் கேள்விகள் அமைந்திருக்கும்.

மாணவர்களை மதிப்பிடும் முறை அல்லாமல் மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முறையில் தேர்வு அமையும்.

பெரும்பாலான வினாக்கள் மாணவர்களின் சிந்திக்கும் திறனையும் காரண காரியங்களை அறியும் திறனையும் சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

விடைத்தாள் ’OMR’ முறையில் சரியான விடைக்குரிய வட்டத்தை பென்சிலால் நிரப்பும் வண்ணம் இருக்கும்.

4,5 பிரிவு 1, 6,7,8 பிரிவு, 2- 9,10 பிரிவு, 3- 11,12 பிரிவு

துளிர் திறனாய்வு நிகழ்வு முக்கியமான சாதனைகளை புரிந்து வருகிறது. அரசு போட்டித்தேர்வுகளுக்கு அடுத்ததாக மிக அதிகமான பேர் பங்கேற்கும் நிகழ்வாக துளிர் திறனாய்வு நிகழ்வு வளர்ச்சி பெற்றுள்ளது.

மாணவர்களுக்கான பரிசுகள்

வழக்கம் போல் மாநில அளவில் முதல் 10 இடங்கள் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மாநில அளவில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளுடன் அறிவியல் சுற்றுலா நடத்தப்படும்.

அறிவியல் சுற்றுலாவில் பங்கேற்கும் குழந்தைகளுக்கான போக்குவரத்து மற்றும் பரிசுகளை மாநில மையம் ஏற்கும்.

பள்ளிகளுக்கான பரிசுகள்

500 மற்றும் 500க்கும் மேற்பட்ட பதிவுகளைத் தரும் பள்ளிகளுக்கு அறிவியல் நூலகம் பரிசாக வழங்கப்படும்.

மாநிலத்தில் அதிக எண்ணிக்கை தரும் பள்ளிக்கு சிறப்பு கேடயம் பரிசாக வழங்கப்படும்.

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ் லாய்

மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

நாகை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 

Next Post

போர் நிறுத்தம் மற்றும் உலக அமைதி வேண்டி ஆறாம் வகுப்பு மாணவன் சிரசாசனம் செய்தும் தலைகீழாய் நடந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Next Post
போர் நிறுத்தம் மற்றும் உலக அமைதி வேண்டி ஆறாம் வகுப்பு மாணவன் சிரசாசனம் செய்தும் தலைகீழாய் நடந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

போர் நிறுத்தம் மற்றும் உலக அமைதி வேண்டி ஆறாம் வகுப்பு மாணவன் சிரசாசனம் செய்தும் தலைகீழாய் நடந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In