• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வை

policeseithitv by policeseithitv
February 24, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேதாரண்யம் பிப் 24
திருமருகல் ஊராட்சி ஒன்றியம் கங்களாஞ்சேரி, வாழ்குடி ஊராட்சி ஆணைக்கோவில் கிராமம், இராராந்திமங்கலம், திருப்பயத்தாங்குடி, காரையூர், பில்லாலி ஆகிய ஊராட்சி பகுதிகளில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும், விற்குடி ஊராட்சி அபிஷேக நத்தம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வடிகால் வாய்க்காலில் 100 நாள் வேலை நடைபெறுவதையும், திருப்பயத்தாங்குடி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்தும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பில்லாலி ஊராட்சியில் ரூ.6.74 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் சுடுகாட்டுச் சாலையை கப்பிச்சாலையாக அமைக்கப்பட்டிருப்பதையும், மற்றும் தெற்கு சாலையை சிமெண்ட் சாலையாக அமைக்கப்பட்டிருப்பதையும், மேலும் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் ஆட்டுக்கொட்டகை அமைக்கப்பட்டிருப்பதையும், ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் மாதாகோவில் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டிருப்பதையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.


அதனைத் தொடர்ந்து விற்குடி, காரையூர் ஊராட்சிகளில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினையும், அங்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் உரிய இடத்திற்கு இயக்கம் செய்யப்படுவதையும் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது பொறியாளர் செந்தில்குமார், ஒன்றிய மேற்பார்வையாளர் செல்வராஜ்,மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

Previous Post

பத்திரிகையாளர்கள் வாழ்வில் ஒளியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல வாரியம் மற்றும் நலவாரிய குழு அமைத்த தமிழக அரசிற்கு பத்திரிகையாளர்கள் புகழாரம்

Next Post

சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் 125 வது பிறந்தநாள் விழா

Next Post
சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் 125 வது பிறந்தநாள் விழா

சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் 125 வது பிறந்தநாள் விழா

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In