நாகப்பட்டினம்
பிப் 24
ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்ள்ளி மாணவர்களிடம் வகுப்பறையில் பாடப்பொருளை கற்பதோடு மட்டுமல்லாமல் தங்களைச் சுற்றி நிகழும் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து அவர்களை தொடர்ந்து வாசிக்க வைக்கும் விதமாக பள்ளிக்கு தினமும் நாளிதழ் வரவழைத்து மதிய உணவு வேளையில் அவர்களை நாளிதழ் வாசிக்க வைக்கிறார்கள்.
இதற்காக பள்ளி நிதியிலிருந்து ரூபாய் 1500 ஆண்டு சந்தா செலுத்தி 1.1 .2022 முதல் 31 .12.2022 வரை திங்கள் முதல் வெள்ளி வரை நாளிதழ்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நூலகத்துக்கு சென்று வாசிக்க தயங்கும் மாணவர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும்.
பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் அதே நேரத்தில் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும் இது பயன்படும்.


ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை ஓய்வு நேரங்களிலோ அல்லது வாரம் ஒரு முறையோ நாளிதழ் வாசிக்க ஊக்குவிக்கின்றனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

