மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன் அவர்கள் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும், பேருந்து பயணிகள் அனைவருக்கும் துண்டுபிரசுரங்கள் அளித்து சாலை பாதுகாப்பு விதிகளை குறித்தும், தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்தும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விவரித்தார் விழிப்புணர்வு மேற்கொண்டார்.

பள்ளிகள் திறக்கப்பட்டதால் பேருந்துகளில் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மீது அரியலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர மூர்த்தி அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் அவர்கள் உடன் இருந்தனர்
இறுதியாக ஓட்டுனர்,நடத்துனர் மற்றும் மக்கள் அனைவரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் சாலை பாதுகாப்பு விதிகளை மதிப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

இந்த ஆண்டு ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17 வரை 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்படுகின்றது.

