கானத்தூர் பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா கடத்தி வந்த 5 நபர்களை கைது செய்து 12 டன் குட்கா, 2 கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் 3 இலகுரக வாகனங்களை கைப்பற்றிய அடையாறு துணை கமிஷ்னர் தலைமையிலான தனிப்படைக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்

சென்னை போலீஸ் கமிஷ்னரின் உத்தரவின்பேரிலான “போதை தடுப்புக்கான நடவடிக்கையின் ” தொடர்ச்சியாக
அடையாறு மாவட்ட துணை கமிஷ்ணர் விகரமன் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் மனோஜ்குமார், செல்வகுமார், தலைமைக் காவலர் வெங்கடேசன், முதல்நிலைக் காவலர்கள் சங்கர், சண்முகம் மற்றும் பூர்ணகுமார் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஜனவரி 30ம்தேதி அன்று காலை, முட்டுக்காடு, சோதனைசாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, சந்தேகப்படும்படி வந்த 5 சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் பெருமளவு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 10 முத்துக்குமார், 25, தூத்துக்குடி மாவட்டம் செல்வராஜ், 47, தூத்துக்குடி மாவட்டம் அம்ஜித், 42, பல்லாவரம் ராஜகுருதி, 24, பழைய பெருங்களத்தூர் பட்டுராஜா, 27, தூத்துக்குடி மாவட்டம் ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 12 டன் எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பான்மசாலா பாக்கெட்டுகள், 2 கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் 3 இலகுரக சரக்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கினார்.


