நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவேட்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் மெய்யநாதன் .
வேதாரணியம்
பிப் 22
உள்ளாட்சி தேர்தல் தமிழகமெங்கும் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று முடிந்த நிலையில் , நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கான தேர்தலில் 19 இடங்களில் வென்ற திமுக வேட்பாளர்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். திமுக வேதாரண்யம் நகர கழக செயலாளர் மா. மீ புகழேந்தி அலுவலகத்தில் பாராட்டு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிவ.வீ.மெய்யநாதன் நகராட்சியை கைபற்றியது போல் வேதாரண்யம் சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெற நீங்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் கௌதமன் மற்றும் வேதாரணியம் நகர கழக செயலாளர் மா.மீ. புகழேந்தி ஒன்றிய கழக செயலாளர் உதயம். முருகையன் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.
செய்தி தொகுபு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

