தூத்துக்குடியில் ரூ.20 கோடி போதைப்பொருள் சிக்கியது!! கடத்தல் கும்பல் தலைவன் உட்பட 8 பேர் கைது!
தூத்துக்குடி, பிப்.21-
தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக க்யூப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்துள்ளது. இதையடுத்து க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ் மற்றும் வேல்ராஜ் வேலாயுதம் மற்றும் போலீசார் சந்தேகத்திற்கிடமான பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை வேம்பார் கடற்கரை அருகில் வைத்து சந்தேகத்திற்கிடமான ஒரு கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடமிர
ருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 10 கிலோ அளவுள்ள கிரிஸ்டால் மெத்தம்பீட்டாமைன் என்ற போதைப்பொருளை கைப்பற்றிய போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட கீழவைப்பாரை சேர்ந்த கிரிட்டோவாஸ் மகன் இருதயவாஸ்(45) த/பெ கிரிட்டோ மற்றும் அவருக்கு உதவியாக இருந்த 7 நபர்கள் சிக்கினர்.
2.கிங்பன் த/பெ அந்தோனி
3.சிலுவை
த/பெ தொம்மைகுத்தாலின்
4.அஸ்வின்
த/பெ ராஜ்
5.வினிஸ்ட்டன்
த/பெ ஆல்வின் 6.சுபாஷ் த/பெ
ஜெபமாலை
7.சைமன்
த/பெ சார்லஸ் பர்ணாடோ அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது அவர்களை தூத்துக்குடி க்யூ பிரிவு அலுவலகம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இருதயவாஸ் இலங்கையில் உள்ள முக்கிய புள்ளியுடன் தொடர்பில் இருந்து பல ஆண்டுகளாக இந்த போதைப்பொருள் கடத்தல் தொழிலை செய்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.





