புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வர்த்தகரெட்டிபட்டியில் நேற்று கண்மாயில் குளிக்க வந்த சிறுமி மற்றும் சிறுவன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை.*
*♻️தூத்துக்குடி மாவட்டம் வர்த்தகரெட்டிபட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முத்துகுமார் என்பவரது மகள் ஆஷாராணி (18) மற்றும் அதே தெருவை சேர்ந்த அடைக்கலம் என்பவரது மகன் ஆனந்தகிருஷ்ணன் (8) ஆகிய இருவரும் நேற்று (20.02.2022) புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி. பாண்டியாபுரம் பகுதியிலுள்ள பொட்டல்குளம் என்னும் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.*
*♻️அப்போது மேற்படி குளிக்க வந்த ஆஷாராணி மற்றும் ஆனந்தகிருஷ்ணன் ஆகிய இருவரும் குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*
*♻️இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தார். கடந்த வருடத்தில் மேல அரசரடி கண்மாயில் தனியாக குளிக்க சென்ற சிறுவர்கள் இருவர், கழுகுமலை பகுதியில் உள்ள ஓடைகுளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர் ஒருவர் மற்றும் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆற்றங்கரையில் ஆடுகள் மேய்க்க சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஆகவே பொதுமக்கள் நீர் நிலைகள் மற்றும் ஆற்றங்கரைகளில் குளிக்கச் செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு பலமுறை திரும்ப திரும்ப எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இதுபோன்று நீர்நிலைகளுக்கு தனியாக குளிக்க செல்வதற்கோ, நீர்நிலைகளின் அருகில் விளையாட செல்வதற்கோ அனுமதிக்காதீர்கள். இனிமேலாவது இது போன்ற துயரமான சம்பவங்கள் நிகழாமல் இருக்க பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

*♻️இந்த நிகழ்வின்போது தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் பாண்டியன், முத்துவீரப்பன், தட்டப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.*

