தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் சத்தியபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (19.02.2022) தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் சத்தியபிரதா சாகு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் 25.01.2022 முதல் 15.03.2022 வரை நடத்தப்பட்டு வரும் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் கூட்டம் நடத்தப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான போட்டிகள் குறித்தும் அதில் பங்கேற்கும் வழிகள் தொடர்பாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரிகளில் பயின்றுவரும் அனைத்து மாணவர்களையும் தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வுபோட்டிகளில் முழுஅளவில் பங்கேற்கச் செய்து அதிக அளவிலான பங்கேற்பை உறுதி செய்திட அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேற்படி போட்டிகளில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்கச் செய்வது தொடர்பாக அனைத்து கல்லூரி நிருவாகத்திற்கு அனைத்து துறை வாயிலாகவும், மாவட்ட நிருவாகமும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். மேற்படி கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா கண்ணபிரான், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள், மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் போராசிரியர்கள் உதவி பேராசியரியர்கள் கலந்துகொண்டனர்.

