வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசிமகத்தெப்பத் திருவிழா – ஏராளமானோர் சுவாமி தரிசனம் .
வேதாரணியம்
பிப் 18
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் மாசி மகப் பெருவிழா கடந்த 29ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்நிலையில் மாசி மகப் பெருவிழாவில் இன்று சுவாமி மணிகர்ணிகை தீர்த்தத்தில் கல்யாணசுந்தரர் தம்பதி சமேதராய் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வேதாரண்யம் வர்த்தக சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு தமற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .வர்த்தக சங்கத்தின் சார்பில் அனைவருக்கும்
அன்னதானம் அளிக்கப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரணியம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் மற்றும் ஆய்வாளர் சுப்ரியா உள்ளிட்ட காவலர்கள் செய்திருந்தனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

