போலீஸ்_எக்ஸ்பிரஸ் மாத இதழ்
புதுப் பொலிவுடன் தொடக்க விழா..
18-2-2022 அன்று காலை 11:30 மணி அளவில் முதலூர் மன்றாட்டு ஜெப மையத்தில்
இத்தொடக்கவிழா நடைபெற்றது..
பரபரப்பு செய்தி ஆசிரியர் #எஸ்_பி_இராமநாதன் தலைமை. முதல் பிரதியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட,தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர்டி.எஸ்.ஆர். சுபாஷ் பெற்றுக் கொண்டார்..
செய்தி ஆசிரியர் எம் விஜயராஜா, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் இருதய ஞான ரமேஷ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கி.ம.சங்கர், சாந்தகுமார் முன்னிலை வகித்தனர்..
மூத்த செய்தியாளர் ஆ.க.வே என்ற ஆ.க.வேணுகோபால் வரவுஏற்புரை நிகழ்த்தினார்..
திமுக முன்னோடிகள் அலெக்ஸ் பிரிட்டோ, இராஜேஷ் ரவிசுந்தர்,இந்திய கம்யூனிஸ்ட் தோழர் கிருஷ்ணராஜ், வணிக முன்னோடி ஜெ.காமராஜ் ரஞ்சன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஜெ.நிக்சன் ஏற்புரை வழங்கினார்.. காளிதாஸ் நன்றிஉரை கூறினார்..
இவ்விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துணைத் தலைவர் மகேஸ்வரன், வழக்கு உரைஞர் மெய்யூர் எட்வர்ட், முதலூர் எஸ்.ஜெ மஸ்கோத் நிறுவன அதிபர் ஜாண்சன் ஐசக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..



