மதுரையில் நாளைய தினம் 100 வார்டுகளில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையொட்டி போலீசாரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நகரில் பல பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி அச்சமின்றி வாக்களிக்கலாம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்
மதுரை நகரின் முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் இன்றிலிருந்தே போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
மேலும் வாக்கு பதிவு மையங்களிலும் வாக்கு இயந்திரங்கள் கொண்டு வருவதற்கும், கொண்டு செல்வதற்கும் உள்ள வாகனங்களிலும் போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பதட்டமான வாக்கு சாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
கூடுதலாக ரோந்து வாகனங்களில் போலீசார் நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேர ரோந்து பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மொத்தத்தில் அசம்பாவிதம் ஏதுமின்றி மதுரை மாநகராட்சி தேர்தல் நடந்திட வேண்டும் என்பதில் மாநகர காவல்துறையினர் அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர்.
சு.இரத்தினவேல்
செய்தியாளர்.
மதுரை.

