கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கோடியக்கரை மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை அபகரித்துக் கொண்டனர்.
வேதாரணியம்
பிப் 18
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து நேற்று மதியம் 12 மணிக்கு சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் செல்வம் ,ரவி , நாகூரான் , பூவரசன் ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடிக்கரையில் இருந்து 9 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இரவு 9 மணிக்கு அங்கு வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி மீன்வர்களிடமிருந்த ஜிபிஎஸ் கருவி , 2 செல்போன்கள் ,மீன் மற்றும் பெட்ரோல் டேங்க்கையும் எடுத்துச் சென்றனர். பெட்ரோல் இல்லாத காரணத்தால் மீனவர்கள் கரை திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. அப்போது அப்பகுதிக்கு வந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்களின் உதவியோடு படகு உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். கோடிக்கரையில் இருந்து வேறொரு படகின் மூலம் பெட்ரோல் மற்றும் உணவு பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு நடுக்கடலில் படகில் இருந்த மீனவர்களிடம் கொடுத்து மீனவர்கள் இன்று மதியம் 2 மணிக்கு கரை சேர்ந்தனர் .தொடர்ந்து இது போன்று இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்த தமிழக மீனவர்கள், உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர் .இதுகுறித்து மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கியூ பிரான்ச் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

