நாகை ஐடிஐயில் படித்த பயிற்சியாளர்களின் தேசிய தொழிற்சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் – நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வேதாரண்யம் பிப் 17
நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பயின்ற பயிற்சியாளர்களின் தேசிய தொழிற்சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்
நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2014 இருந்து 2020-ஆம் ஆண்டு வரையில் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய தொழிற்சான்றிதழில் உள்ள திருத்தங்களை அதாவது பயிற்சியாளரின் பெயர், தந்தையின் பெயர், தாயின் பெயர், புகைப்பட மாற்றம் மற்றும் பயிற்சி பெற்ற தொழிற்பிரிவு பெயரில் உள்ள திருத்தம் ஆகியவற்றை சரிசெய்ய 02.03.2022 வரையில் www.ncvtmis.gov.in என்ற வெப்சைட்டில் உள்ள complaint tool Grievance login grievance-ல் விண்ணப்பிக்கலாம். மேலும் 2014-க்கு முன்பு வழங்கப்பட்ட சான்றிதழ்களில் திருத்தம் செய்ய உரிய ஆவணங்களுடன் நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04365-250129 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

