திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வேதாரண்யம் பிப் 16
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளையும் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினையும் மாவட்டஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருமருகல் ஊராட்சி ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை பார்வையிட்டு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் மழையால் பாதிக்காத வண்ணம் தார்பாய் கொண்டு பாதுகாக்கப்படுவதையும், நெல் மூட்டைகள் உரிய இடத்திற்கு இயக்கம் செய்யப்படுவதையும் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து திருமருகல் ஊராட்சி ஒன்றியம் சீயாத்தமங்கை, கட்டுமாவடி, அருண்மொழிதேவன், ஏர்வாடி ஆகிய ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வரும் கட்டுமானபணிகளையும், இடையாத்தாங்குடி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.45 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள பணியினையும், ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகத்தின் கட்டுமான பணிகளையும், சீயாத்தமங்கை ஊராட்சியில் தனி நபர் கழிப்பிடம் கட்டும் பணியினையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை உதவி பொறியாளர்கள் செந்தில், கவிதாராணி, பணிமேற்பார்வையாளர்கள் செல்லபாண்டியன், சீனிவாசன், மற்றும் அரசுஅலுவலர்கள் இருந்தனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

