வேதாரண்யத்தில் மாசி மகத்தையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது.
வேதாரணியம்
பிப் 16
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் நடந்து வரும் மாசிமக பெருவிழாவில் மாசி மகத்தையொட்டி சன்னதி கடலில் நடைபெற்ற மகதீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகர சுவாமி பிரதான வீதிகளில் வீதியுலா வந்து சன்னதி கடலில் மகதீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கடலில் புனிதநீராடி வழிபட்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

