தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா?
பறக்கும் படையினர் விசாரணைக்கு அழைத்து சென்றதால்
தூத்துக்குடியில் திடீர் பரபரப்பு
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் அதிமுக- திமுக நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளதால், யார் மேயர் பதவியை கைப்பற்றுவார் என்ற போட்டா போட்டி நடக்கிறது.
தூத்துக்குடி தெற்கு மண்டல பகுதியில் உள்ள ஒரு வார்டில் முக்கிய கட்சி வேட்பாளர் ஒருவர் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து வந்த ரகசிய தகவலின்பேரில் பறக்கும்படை போலீசார் பணம் பட்டுவாடா செய்ததாக கூறப்படும் நபரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் பிரபல கட்சி மூலம் பணம் பட்டுவாடா, அன்பளிப்பு பொருட்கள் விநியோகம் போன்றவை நடைபெறுகிறதா? என பறக்கும்படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வரும் நிலையில் தெற்கு மண்டலத்தில் உள்ள ஒரு வார்டில் முக்கிய கட்சி பிரமுகர் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், அதனால் அதில் ஈடுபட்ட ஒருவரை விசாரணைக்கு பறக்கும் படையினர் அழைத்துச் சென்றதாகவும் செய்திகள் பரவியது. மற்ற கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மத்தியில் பாரபட்சமின்றி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

