
*♻️எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக காரில் புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது – ரூபாய் 21,000/- மதிப்புள்ள 22 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்.*
*♻️தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.*
*♻️அதன்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் தலைமையில் விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மகேந்திரன், சங்கரலிங்கபுரம் காவல் நிலையம் முதல் நிலை காவலர் பால்ராஜ், காடல்குடி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் முத்துகாமாட்சி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (13.02.2022) எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் ஜங்ஷன் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த TN 22 CY 9933 Ford என்னும் காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரில் வந்தவர்கள் ரமேஷ்குமார் (42), த/பெ. ராமச்சந்திரன், சென்னமரெட்டிப்பட்டி, மற்றும் கண்ணன் (36), த/பெ. செல்லக்கனி, பனையடிப்பட்டி ஆகியோர் என்பதும், அவர்கள் சட்டவிரோதமாக விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.*
*♻️உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரிகள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 21,000/- மதிப்புள்ள 22 கிலோ புகையிலை பொருட்களையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட TN 22 CY 9933 Ford என்ற காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*
*♻️மேலும் கைது செய்யப்பட்ட எதிரிகள் ரமேஷ்குமார் மற்றும் கண்ணன் ஆகிய இருவர் மீதும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக தூத்துக்குடி மாவட்டத்தில் சூரங்குடி, எட்டையாபுரம், சங்கரலிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் ஒரு வழக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகர காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.*

