நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்.*
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 17 டவுன் பஞ்சாயத்துக்களில் வரும் 19.02.2022 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (13.02.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.*
இத்தேர்தல் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கு 319 வாக்குபதிவு மையங்களிலும், கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கு 85 வாக்குபதிவு மையங்களிலும், திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளுக்கு 32 வாக்குபதிவு மையங்களிலும், காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளுக்கு 40 வாக்குபதிவு மையங்களிலும், 17 டவுன் பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட 261 வார்டுகளுக்கு 268 வாக்குபதிவு மையங்களிலும் என தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 402 வார்டுகளுக்கு 744 வாக்குபதிவு மையங்களில் வரும் 19.02.2022 அன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நடைபெற உள்ளது.*
இத்தேர்தல் பாதுகாப்பு பணியில் தூத்துக்கு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் கணேஷ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத் மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ் ஆகியோரின் தலைமையிலும், கோவில்பட்டி நகராட்சி, கயத்தார் மற்றும் கழுகுமலை பேரூராட்சிகளுக்கு தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயகன் மேற்பார்வையில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் கோவில்பட்டி உதயசூரியன், மணியாச்சி சங்கர், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு பிரேமானந்தன் ஆகியோரின் தலைமையிலும், காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் ஆறுமுகநேரி, ஆத்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, கானம், ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், சாயர்புரம் மற்றும் ஏரல் ஆகிய பேரூராட்சிகளுக்கு தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி அவர்கள் மேற்பார்வையில், திருச்செந்தூர் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், சாத்தான்குளம் ராஜூ, ஆயுதப்படை கண்ணபிரான், மாவட்ட குற்ற பிரிவு ஜெயராம், மதுவிலக்கு பிரிவு பாலாஜி ஆகியோர் தலைமையிலும், விளாத்திகுளம், எட்டையாபுரம் மற்றும் புதூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் தலைமையிலும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 2500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.*
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், முக்கிய சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும், ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின் காவல்துறையினருக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்.*
இதனை தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் கணேஷ், விளாத்திகுளம் பிரகாஷ், ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், கோவில்பட்டி உதயசூரியன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணப்பாளர் அவர்கள் பாராட்டு சான்று மற்றும் பரிசு வழங்கினார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் கண்கணிகாப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் கணேஷ், ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், மணியாச்சி சங்கர், கோவில்பட்டி உதயசூரியன், விளாத்திகுளம் பிரகாஷ், சாத்தான்குளம் ராஜூ, மாவட்ட குற்ற பிரிவு ஜெயராம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு பிரேமானந்தன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், மாவட்ட குற்ற பிரிவு ஜெயராம், ஆயுதப்படை கண்ணபிரான், மதுவிலக்கு பிரிவு பாலாஜி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.*

