நாய் கடித்து புள்ளிமான் சாவு.
வேதாரணியம்
பிப் 13
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனஉயிரின சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், நரி , காட்டுப்பன்றி ,முயல், குதிரை , குரங்கு என வனவிலங்குகள் உள்ளன .இதில் புள்ளி மான்கள் பல எண்ணிக்கையில் சரணாலயத்தை விட்டு வெளியே உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் காணப்படுகிறது. இன்று காலை கோடியக்காடு ஊராட்சிக்குட்பட்ட காளியம்மன் கோயில் தெரு பகுதிக்கு வந்த ஒரு வயதுடைய ஆண் புள்ளி மானை நாய்கள் துரத்தி கடித்ததில் சம்பவ இடத்திலேயே புள்ளி மான் பரிதாபமாக இறந்தது . தகவலறிந்த வனத்துறையினர் இறந்த மானைமீட்டு பிரேத பரிசோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

