• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவசர கோலத்தில் போடப்படும் தரமற்ற சாலைகள்! ஊழல் அதிகாரிகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை!! தலைமைச் செயலர் இறையன்பு அதிரடியால் ஆட்டம் காணும் ஒப்பந்தக்காரர்கள்

policeseithitv by policeseithitv
February 12, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவசர கோலத்தில் போடப்படும் தரமற்ற சாலைகள்!  ஊழல் அதிகாரிகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை!! தலைமைச் செயலர் இறையன்பு அதிரடியால் ஆட்டம் காணும் ஒப்பந்தக்காரர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நெடுஞ்சாலைத்துறை சார்பில்
அவசர கோலத்தில்
போடப்படும் தரமற்ற சாலைகள்!

ஊழல் அதிகாரிகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை!! தலைமைச் செயலர் இறையன்பு அதிரடியால் ஆட்டம் காணும் ஒப்பந்தக்காரர்கள்!
——————
சென்னை,
பிப்ரவரி,13

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக சாலை அமைப்பது, பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது என்று தொடர்ந்து பணிகள் நடைபெற்று கொண்டுள்ளன. இந்த பணிகளின்போது சில சமயத்தில் அவசர கோலத்தில் சாலைகள் அமைக்கப்படுவதால், அவை அமைக்கப்பட்ட சில வாரங்கள் அல்லது மாதங்களிலேயே கண்டமாகி, குண்டும் குழியுமாகி விடுகின்றன. சாலைகள் போடும்போதே தரமற்றதாக போடுவதால், விரைவிலேயே அவைகள் சேதமடைவதுடன், வாகன ஓட்டிகள் உயிரிழப்புகளுக்கும் ஆளாகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலைத் துறைக்கு கடிதம் ஒன்றை அண்மையில் எழுதியிருந்தார். அதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதியில் புதிதாக சாலையை அமைக்கும்போதும், சீரமைக்கும் போதும் பழைய சாலையின் மேற்பரப்பை முழுவதும் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு புதிதாக சாலையை அமைக்க வேண்டும். லை அமைக்கும்போது உரிய நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினும் அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால், தலைமைச் செயலாளர், இறையன்புவின் உத்தரவுக்கு பின்னரும், அவரே நேரில் சென்று பல இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பிறகும், பழையபடியே சாலைகள் அமைக்கப்படுகின்றன. அதாவது, பழைய சாலைகளின் பேற்பரப்பை சுரண்டி எடுக்காமல் அதன் மீதே புதிய சாலைகள் போடப்படுகின்றன. இதனால், ஏற்கனவே இருக்கும் சாலையில் மட்டத்தினை விட புதிய சாலையின் உயரம் அதிகரிப்பதால் அவற்றின் தரமும், உழைப்பும் குறைகிறது. சாலையையொட்டி அமைந்துள்ள வீடுகளின் உயரம் தாழ்வதால் மழைநீர் வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக சாலை அமைப்பது, பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது என்று தொடர்ந்து பணிகள் நடைபெற்று கொண்டுள்ளன. இந்த பணிகளின்போது சில சமயத்தில் அவசர கோலத்தில் சாலைகள் அமைக்கப்படுவதால், அவை அமைக்கப்பட்ட சில வாரங்கள் அல்லது மாதங்களிலேயே கண்டமாகி, குண்டும் குழியுமாகி விடுகின்றன. சாலைகள் போடும்போதே தரமற்றதாக போடுவதால், விரைவிலேயே அவைகள் சேதமடைவதுடன், வாகன ஓட்டிகள் உயிரிழப்புகளுக்கும் ஆளாகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலைத் துறைக்கு கடிதம் ஒன்றை அண்மையில் எழுதியிருந்தார். அதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதியில் புதிதாக சாலையை அமைக்கும்போதும், சீரமைக்கும் போதும் பழைய சாலையின் மேற்பரப்பை முழுவதும் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு புதிதாக சாலையை அமைக்க வேண்டும். லை அமைக்கும்போது உரிய நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினும் அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், இறையன்புவின் உத்தரவுக்கு பின்னரும், அவரே நேரில் சென்று பல இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பிறகும், பழையபடியே சாலைகள் அமைக்கப்படுகின்றன. அதாவது, பழைய சாலைகளின் பேற்பரப்பை சுரண்டி எடுக்காமல் அதன் மீதே புதிய சாலைகள் போடப்படுகின்றன. இதனால், ஏற்கனவே இருக்கும் சாலையில் மட்டத்தினை விட புதிய சாலையின் உயரம் அதிகரிப்பதால் அவற்றின் தரமும், உழைப்பும் குறைகிறது. சாலையையொட்டி அமைந்துள்ள வீடுகளின் உயரம் தாழ்வதால் மழைநீர் வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்படுகிறது.

தலைமைச் செயலாளார் உத்தரவுக்கு பின்னர், பழைய தார் மற்றும் கான்கரீட் சாலைகளை உடைத்து எடுத்து விட்டு புதிய சாலைகளை போட துவங்கி உள்ளார்கள். ஆனாலும் சில பகுதிகளில் மக்கள் கவனிக்காத பட்சத்தில் பழைய சாலை மீது புதிய சாலையை இரவோடு இரவாக போட்டு விடுவதாக குற்றம் சாட்டப்பாடுகிறது.

அதுதவிர, இதன் பின்னால் கோடிக்கணக்கில் ஊழலும் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தொகையில், அதிகாரிகளுக்கும் கமிஷன் கொடுக்கப்படுவதால் அவர்களும் ஒப்பந்ததாரர்களை கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தலைமை செயலாளர் இறையன்புவின் காதுகளுக்கு சென்றுள்ளதாக கூறுகின்றன தலைமை செயலக வட்டாரங்கள்.
சாலை பணிகள் தொடர்பாக அவர் பல முறை அறிவுறுத்தியும், நேரில் சென்று பார்வையிட்டும் முறைகேடுகள் நின்றபாடில்லை. நீதிமன்றமும், முதல்வரும் இதுதொடர்பாக ஏற்கனவேஎ அறிவுறுத்தியுள்ளனர். இந்த சூழலில் முதல்வரின் கவனத்துக்கு இந்த விஷயம் சென்றால் என்னாவது என இறையன்பு கடுமையான டென்ஷனில் இருக்கிறார். விரைவில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்கின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்கள் உடன் கூட்டணி அமைத்து முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை உறுதி எனவும் ஒப்பந்தக்காரர்கள் கருப்பு பட்டியலில் கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் ஊழல் அதிகாரிகள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை பாயும் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது. தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் கழுகு பார்வையில் இனி ஊழல் அதிகாரிகள் தப்பிக்க முடியாது என்பது இதற்கு ஒரு உதாரணம்

Previous Post

காவல்துறையினர்க்கு உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Next Post

தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீட வேப்பமரத்தில் பால்வடியும் அதிசயம்: பக்தர்கள் பரவசம்!

Next Post
தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீட வேப்பமரத்தில் பால்வடியும் அதிசயம்: பக்தர்கள் பரவசம்!

தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீட வேப்பமரத்தில் பால்வடியும் அதிசயம்: பக்தர்கள் பரவசம்!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In