தூத்துக்குடி திருவிக நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீட வேப்பமரத்தில் பால்வடியும் அற்புதத்தைக் கண்டு பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.
தூத்துக்குடி திருவிக நகரில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் உள்ளது. இதன் முன்பாக வேப்பமரம் உள்ளது. கடந்த தை வெள்ளிக்கிழமை அன்று ஒரு இடத்தில் பால் வடிந்துள்ளது. இந்நிலையில், இன்று சனிக்கிழமை வேப்பமரத்தில் 3 இடங்களில் பால் வடிகிறது. இதனை ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். தொடர்ந்து 108 மந்திரங்கள் படித்து மாலை அணிவித்து தீபாராதனை செய்து வழிபட்டனர்.

