காவல்துறையினர்க்கு உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
——————————–
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் வருகின்ற *19.02.2022* அன்று *நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் ஐ.பி.எஸ்அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பல முன்னேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார். அதில் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட ஆயுதப்படையில் வைத்து தேர்தலில் வாக்கு பெட்டிகளை கொண்டு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மொபைல் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தேர்தல் தொடர்பான அறிவுரைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். அதில் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், வாக்கு பெட்டிகளை கவனமுடன் கையாள வேண்டும் என்றும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் கவனமாக பணியாற்ற வேண்டும். என்றும், பல அறிவுரை வழங்கினார். இதில் அதிகாரிகள் மற்றும் ஆளினார்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு சுரேஷ்குமார் நாகர்கோவில்

