கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் ஆன்லைன் மூலமாக 50 லட்ச ரூபாய் மோசடி செய்த நைஜீரிய வாலிபரை குமரிமாவட்ட சைபர் கிரைம் போலீசார் உத்திரப்பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்பிகாடு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைன் பள்ளி வகுப்பில் இருந்த போது அவருக்கு அமெரிக்காவில் இருந்து ஒரு பெண் இ மெயில் அனுப்பி உள்ளார்,அமெரிக்கா வில் எனக்கு ஏராளமான சொத்துகள் இருப்பதாகவும் , தனது தந்தையின் ஆசைப்படி இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு சொத்துக்களை பிரித்துக்கொடுக்க ஆசைப்படுவதாகவும் 40 சதவீதத்தை தாங்கள் உபயோகித்துக் கொண்டு மீதி 60 சதவீதத்தை ஆதரவற்ற மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறினார் . இது தொடர்பாக சில ஆவணங்களையும் மெயில் செய்து வைத்துள்ளார்,அனுப்பிய மெயிலில் பெண்ணின் கணவருக்கு புற்றுநோய் இருப்பதால் அவரது பேரில் உள்ள பல மில்லியன் அமெரிக்க டாலர்களை வளங்க உங்களை தேர்வு செய்துள்ளோம் என அதில் தெரிவிக்கபட்டு இருந்தது.மேலும் அமெரிக்க டாலர்களாக முதற்கட்டமாக அனுப்புவதாகவும் , இந்தியாவில் அதை பணமாக மாற்றி பயன்படுத்திக் கொள்ளும் மாறும் கூறினார்,பின்னர் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அனுப்பி இருப்பதாகவும் அதை இந்திய பணமாக மாற்றுவதற்கு தேவையான சுங்கவரி உள்ளிட்டவற்றைசெலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்,இதற்காக வரி செலுத்த தற்போது தன்னிடம் இந்திய பணம் எதுவும் இல்லாததால் நான் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைக்குமாறும் பின்னர் பணத்தை தங்களுக்கு திருப்பித் தந்து விடுவதாகவும் அந்த நபர் கூறினார் .

இதை நம்பி அவர் கூறியபடி சுமார் ரூ.51.60 லட்சம் அனுப்பினோம்,ஆனால் அதன் பின்பு எந்த ஒரு பதிலும் இல்லை . இதையடுத்து அவர் தொடர்பு கொண்ட மொபைல் போன்கள்,மெயில் முகவரிகளை தொடர்புகொண்டபோது அவை செயலிழந்த நிலையில் இருந்தன,இதனால் அதிர்ந்து போன அந்த இளம் பெண் அவரது பாட்டி இடம் தான் ஏமாந்த தகவலை கூறியுள்ளார்,அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் போலீசாரிடம் பாட்டி புகார் ஒன்றை அளித்தார்,இதனையடுத்து வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் , இந்தப் பெண்மணி பணம் செலுத்திய வங்கி எண் , செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை கொண்டு போலீசார் குற்றவாளியை கண்டறிய முயற்சி மேற்கொண்டனர் அப்போது சம்பந்தப்பட்ட நபர் உத்திரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து டெல்லி விரைந்த கன்னியாகுமரி சைபர் கிரைம் போலீசார் அங்கு பதுங்கியிருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த எபுகா பிரான்சிஸ் என்ற 28 வயது வாலிபரை கைது செய்து குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்துள்ளது டெல்லியில் இது போன்று ஆன்லைன் மோசடி கும்பல் பல செயல்படுவதாகவும் வெளிநாட்டவர் மற்றும் வட இந்தியர்கள் சிலர் இந்த குற்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது மேலும் இந்த கும்பல் பல ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி உள்ளதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்த விவகாரத்தில் இந்த நைஜீரிய வாலிபர் அமெரிக்காவில் வசிக்கும் பெண் என கூறி மோசடியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி தொகுப்பு நாகர்கோவில் சுரேஷ்குமார்

