ஹிஜாப் விவகாரம் – வேதாரண்யத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
வேதாரணியம்
பிப் 11
கர்நாடகாவில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்குச் செல்ல சங்பரிவார் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில , நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பெரிய பள்ளிவாசல் அருகே சங்பரிவார் அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் , சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தலைமையில் பெண்கள் உள்பட இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

