நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மாணவர்கள் தங்கும் விடுதியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வேதாரண்யம் பிப் 11
நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மாணவர்கள் தங்கும் விடுதி மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேரடி வகுப்புகள் தொடங்கபட உள்ளதை முன்னிட்டு மருத்துவம் பயில வரும் மாணவ மாணவிகள் தங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள தங்கும் விடுதியில், தங்கும் அறைகள், உடற்பயிற்சி கூடம், சமையல் கூடம், பார்வையாளர் கூடம், கழிப்பறை மற்றும் குளியலறை போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு விஸ்வநாதன், செயற்பொறியாளர் (மருத்துவப்பணிகள்) ஹேமலதா ஆகியோர் உடன் உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி பூவத்தடி கிராமத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி சாதனத்தின் மூலம் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை அரைத்து மறுசுழற்சி செய்யும் பணிகளை பார்வையிட்டு, பின்னர் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடுகட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .செந்தில் (கிராம ஊராட்சி), ராஜ்குமார், உதவிப் பொறியாளர்கள் வெற்றிவேல், சுகுமார், ரமேஷ், பணிமேற்பார்வையாளர் செல்வம், கலைக்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்,
வேதாரண்யம்.

