வேதாரண்யம் பகுதியில் கனமழை – சீரமைக்கப்பட்ட உப்பளங்கள் மழைநீரில் சேதம்
வேதாரணியம்
பிப் 11
நேற்று மாலை பெய்த வெப்பசலன மழை காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில நேற்று மாலை முதல் இன்று காலை 8 மணி வரை 7 செ.மீ மழையும் , கோடிக்கரையில் 8 செ.மீ மழையும் தலைஞாயிறில் 2 செ.மீ மழையும் பெய்தது. இதன் காரணமாக வேதாரண்யம் பகுதியில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் மழைகாலத்திற்கு பிறகு தற்போது சீரமைக்கப்பட்ட நிலையில் இரவு பெய்த மழை காரணமாக மழை நீர் நிரம்பி சேதமானது. மழைக்குப் பிறகு மீண்டும் உப்பளங்கள் சீரமைக்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

