குரோம்பேட்டை பகுதியில் ஆட்டோவில் பயணி தவற விட்ட 50 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை நேர்மையாக உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை குடும்பத்தினருடன் நேரில் அழைத்து போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் கேடயம் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்
சென்னை, குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த பால் பிரைட், வ/57, என்பவர் ஜனவரி 27ம்தேதி அன்று குரோம்பேட்டை, ஜிஎஸ்டி அன்னை சர்ச்சில் திருமணம் நடைபெற்ற தனது மகளின் திருமணம் முடிந்தவுடன் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றபோது மகளின் 50 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை ஆட்டோவில் தவற விட்டு சென்றுள்ளார். இது குறித்து பால் பிரைட் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வாய்மொழியாக அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுர் சரவணக்குமார் குரோம்பேட்டை காவல் நிலையம் வந்து 50 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை ஆய்வாளர் முன்னிலையில் உரிமையாளர் பால்பிரைட் இடம் ஒப்படைத்தார்.

பயணி ஆட்டோவில் தவறவிட்ட 50 சவரன் அடங்கிய கைப்பையை நேர்மையாக உரிமையாளரிடம் ஒப்படைத்து சமுதாயத்தில் சிறந்த குடிமகனாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சரவணக்குமாரை குடும்பத்தினருடன் சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால்நேரில் அழைத்து கேடயம் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டி கௌரவித்தார்.

