நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேஷ் அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்றுமுன்தினம் காலமானார். இந்நிலையில் 31.01.2021 அன்று அவரது சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு உடல் கொண்டு வரப்பட்டு 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணசிங் அவர்கள் மற்றும் காவல் துறையினர் பலர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்..


