• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருள் கடத்தல் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை -மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கை

policeseithitv by policeseithitv
February 1, 2021
in 24/7 ‎செய்திகள், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருள் கடத்தல் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை -மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது – இந்த ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் 17 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தீவிர நடவடிக்கை – கஞ்சா போன்ற போதைப் பொருள் கடத்தல் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கடும் எச்சரிக்கை.

31.01.2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வன் ஆகியோர் முன்னிலை வகிக்க திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் துணை சூப்பினண்டுகள் தூத்துக்குடி நகரம் கணேஷ், தூத்துக்குடி ஊரகம் பொன்னரசு, விளாத்திக்குளம் பிரகாஷ், சாத்தான்குளம் காட்வின் ஜெகதீஷ்குமார், கோவில்பட்டி கலைக்கதிரவன், மணியாச்சி சங்கர் உட்பட காவல் ஆய்வாளர்கள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் பெண்கள் பயிலும் பள்ளிகளுக்கும் மற்றும் பெண்கள் கூடுமிடங்களுக்கும் சென்று மாணவிகளிடமும், பெண்களிடமும் பெண்களின் பாதுகாப்புக்காகவே கொண்டு வரப்பட்டுள்ள போக்ஸோ சட்டம் பற்றியும், குழந்தை திருமண தடை சட்டம் பற்றியும், பெண்களின் பாதுகாப்புக்கென காவல்துறையின் அவசர உதவியை நாடுவதற்கான ‘காவலன் எஸ். ஓ. எஸ் செயலி பற்றி விளக்கமாக எடுத்துரைக்குமாறும், பெண்களின் பாதுகாப்புக்கென அரசு வழங்கியுள்ள இலவச அலை பேசி எண் 1091 மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென அரசால் வழங்கப்பட்டுள்ள இலவச தொலை பேசி எண். 1098 பற்றியும், இது தவிர ஆண்கள், பெண்கள், மாணவி, மாணவிகள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் காவல்துறையின் அவசர உதவிக்கு இலவச தொலை பேசி எண் 100ஐ தொடர்பு கொள்ளலாம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும் வாட்ஸ் ஆப் வசதியுடன் கூடிய ‘ஹலோ போலீஸ் எண். 95141 44100 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்வது பற்றியும், தொடர்ந்து சாலை பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும், மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் நிலைய அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பினண்டு எஸ்.ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

குண்டர் தடுப்புச் சட்டம் :

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் மட்டும் போக்ஸோ வழக்கு குற்றவாளிகள் 3 பேர், கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 2 பேர் மற்றும் மணல் திருட்டு வழக்கில் ஈடுபட்ட ஒருவர் உட்பட 17 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் வழக்குகள் :

அதே போன்று இந்த ஜனவரி மாதம் மட்டும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 26 பேர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 51,750/- மதிப்புள்ள 7 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

புகையிலைப்பொருட்கள் :

அதே போன்று தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை குறித்து 298 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 298 எதிரிகள் கைது செய்யபட்டு, அவர்களிடமிருந்து ரூபாய் 70,074/- மதிப்புள்ள 51 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டள்ளது.

சட்ட விரோத மது விற்பனை :

மேலும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததது சம்மந்தமாக 481 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 499 பேர் கைது செய்யப்பட்டு, 4778 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய வாகனங்களும் பறி
முதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருள், புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள், ரவுடித்தனம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார்எச்சரித்துள்ளார்.

Previous Post

தூத்துக்குடியில் மனித நேய வார நிறைவு விழா : மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார்

Next Post

நேர்மையான ஆட்டோ ஓட்டுனரை சென்னை போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து பாராட்டு

Next Post
நேர்மையான ஆட்டோ ஓட்டுனரை சென்னை போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து பாராட்டு

நேர்மையான ஆட்டோ ஓட்டுனரை சென்னை போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In