ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறிப்பில் ஈடுபட்டவர் கைது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுபடி, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்திருப்பேரை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த முருகப்பெருமாள் (33), த/பெ. பிச்சை, தென்திருப்பேரை, என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் அவரை கைது செய்தனர்.

