மாநில அளவில் ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்த குற்றாலம் காவல் ஆய்வாளர் காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டு
மாநில அளவிலான ஆணழகன் போட்டி பாளையங்கோட்டை வா.உ.சி அரங்கத்தில் 02.01.2022 அன்று நடைபெற்றது. இதில் 40 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் குற்றாலம் காவல் ஆய்வாளர் திரு. ஸ்டீபன் ஜோஸ் அவர்கள் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் குற்றாலம் காவல் ஆய்வாளர் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ.சைலேந்திர பாபு IPS நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.முதலிடம் பிடித்த காவல் ஆய்வாளர் அவர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குனர் தனது பாராட்டுக்களை தெரிவித்ததோடு,
மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை வெல்ல தனது வாழ்த்துக்களை கூறி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்..

