மதுரையில் தொடர்ந்து நடைபெறும் போலீஸ் அணிவகுப்பு.
மதுரையில் இன்று மாலை உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர், தெற்கு அவர்களது மேற்பார்வையில் தெற்குவாசல் சரக காவல் உதவி ஆணையர் சண்முகம் அவர்கள் தலைமையில் தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர்கள் புவனேஸ்வரி, ராதிகா, மற்றும் காவல் ஆய்வாளர் பிரபு, முத்துக்குமார், . ஸ்டெல்லாபாய், சந்தானமாரி மற்றும் சுமார் 40 காவல்துறையினர்கள் கலந்து கொண்டனர்
கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று மாலை 05.30 மணி முதல் 06.45 மணி வரை பி5 தெற்குவாசல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தெற்குவெளி வீதியில் ஆரம்பித்து நாடார் வித்யாசாலை சந்து, எப்.எப்.ரோடு, காஜா தெரு, குப்புப்பிள்ளை தோப்பு, பவர் ஹவுஸ் ரோடு, தெற்கு மாரட் வீதி, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, கான்சா மேட்டுத்தெரு, தெற்கு ஆவணி மூலவீதி, மறவர் சாவடி, சின்னக்கடை தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, பால்மால் குறுக்கு தெரு, பந்தடி, தவிட்டுசந்தை, தெற்கு வெளிவீதி வழியாக தெற்குவாசல் சந்திப்பு வரை சென்று அணி வகுப்பு ஊர்வலம் முடிந்தது.

சு.இரத்தினவேல்
செய்தியாளர்
மதுரை.

