தூத்துக்குடியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 4ம்கேட் பகுதியில் தொடங்கி அண்ணாநகர், மகிழ்ச்சிபுரம், பாரதிநகர், அன்னை தெரசா நகர், ராஜீவ்நகர் வழியாக பி அன் டி காலனி வந்து நிறைவடைந்தது.
இந்த கொடி அணிவகுப்பில் தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சங்கர், ராமகிருஷ்ணன், புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியன், தட்டப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ராமசந்திரன் மற்றும் முத்துகிருஷ்ணன் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் உள்ளூர் போலீசார் உட்பட 60 பேர் கலந்து கொண்டனர்.

